×

ஈரோட்டிற்கு 5,000 கொரோனா தடுப்பூசி மருந்துகள் ஒதுக்கீடு

ஈரோடு, ஏப். 17:   ஈரோடு  மாவட்டத்திற்கு 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் பெறப்பட்டு  பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதாக கலெக்டர் கதிரவன்  தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைகள் போர்கால அடிப்படையில், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கொரோனா தடுப்பூசி திட்டம் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் ஈரோடு  மாவட்டத்தில் ஈரோடு அரசு மருத்துவமனை, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனை, கோபி அரசு மருத்துவமனை, பவானி அரசு மருத்துவமனை மற்றும்  சிறுவலூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் மக்களுக்கு  போடப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளவர்களான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதார  பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டது. 2வது  கட்டமாக, அரசின் பிற துறைகளில் பணிபுரியும் முன்களப் பணியாளர்களுக்கும்,  3வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு குறைவான உயர்  ரத்த அழுத்தம், இருதய நோய், நீரிழிவு நோய் போன்ற கூட்டு நோய்  உள்ளவர்களுக்கும் மற்றும் 4வது கட்டமாக, பொது மக்களுக்கும் கொரோனா  தடுப்பூசி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.    கொரோனா தடுப்பூசி போட பதிவு  செய்தவா–்களுக்கு தொடா்ந்து தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது,  ஈரோடு மாவட்டத்திற்கு 5,000 தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளது. இதைத்தொடா–்ந்து  பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

Tags : Erode ,
× RELATED பண்டிகை சீசன் இல்லாததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது