×

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த வலியுறுத்தல்

ஈரோடு, ஏப். 17:    தமிழ்நாடு  பந்தல், மேடை அலங்காரம் நலச்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஈரோடு கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருமணம்,  திருவிழா மற்றும் இதர சுபநிகழ்ச்சிகள் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகம்  முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர். கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட  கொரோனா ஊரடங்கின் காரணமாக எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.   இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் ஒரு தொழில் முடக்கத்தினை ஏற்படுத்தும்  வகையில், திருவிழா நிகழ்ச்சிகளை தடை செய்தும், திருமண விழாக்களில் 100 பேர்  மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இதன்  காரணமாக எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குரியாகி உள்ளது.  எனவே,  கட்டுப்பாடுகளுடன் திருவிழாக்களை நடத்தி கொள்ளவும், அரங்குகள் மற்றும்  மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீதம் பேர் கலந்து கொள்ளவும்  அனுமதிக்க வேண்டும்.

Tags :
× RELATED முககவசம் அணியாத 366 பேர் மீது வழக்கு