பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு 16,470 பேர் எழுதினர்

கோவை, ஏப். 17: தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்களுக்கு, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, ‘ஆல் பாஸ்’ வழங்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வரும் 5ம் தேதி பொதுத்தேர்வு துவங்க உள்ளது.  மே 31 வரை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே 3ல் நடக்கவிருந்த மொழிப் பாடத் தேர்வுகள், மே 31க்கு மாற்றப்பட்டுள்ளன. முதல் கட்டமாக, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேற்று செய்முறை தேர்வு நடந்தது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், பள்ளி ஆய்வகங்களில் கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி, மாணவர்களின் செய்முறை தேர்வை, எந்தவித புகார்களுக்கும் இடமின்றி நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று துவங்கியது. வரும் 23ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில் முதல் கட்டத்தில் மாவட்டத்தில் 356 பள்ளிகளில் இருந்து 16 ஆயிரத்து 470 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை 236 மையங்களில் எழுதினர்.

Related Stories: