×

காருண்யா டிரஸ்ட் வளாகத்தில் கொரோனா சிகிச்சை

கோவை, ஏப்.17: கொரோனா 2ம் அலை பரவி வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க, பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில சுகாதாரத்துறைகளும், உலக சுகாதார அமைப்பும் எடுத்து வருகின்றன. கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருப்பவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் தேவைக்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு உதவும் வகையில் பெரியநாயக்கன் பாளையத்திலுள்ள காருண்யா பல்கலைக்கழக டிரஸ்ட் வளாகத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 400 படுக்கை வசதிகள் மற்றும் உணவு கூட வசதிகளை கொரோனா தொற்று பாதித்தவர்கள், அரசு சார்பில் பயன்படுத்திக் கொள்ள காருண்யா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் வழங்கினார்.தற்போது கொரோனா 2ம் அலையில் பாதிப்படைந்தவர்கள் சிகிச்சைக்காக தொடர் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஒரு தீவிர தொற்று நோயாகையால் அதை தடுக்க,  சென்சார் மூலம் இயங்கும் தானியங்கி சானிடைசர் தெளிக்கும் கருவி மற்றும் தொற்று மாதிரிகள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் புறஊதா கதிர்கள் உள்ளடக்கிய கேபின், புறஊதா கதிர்கள் மூலம் வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற கிருமிகளை செயலிழக்கச் செய்யும் உபகரணம், சீஷா தொண்டு நிறுவனம் மூலம், சானிடைசர், முகக்கவசம் போன்றவற்றை தயாரித்து, அரசு மற்றும் பொதுமக்களின் உபயோகத்திற்கு வழங்கியது.  காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகம், மனித குலத்திற்கு ஏற்படும் இடர்களை நீக்க, தொழில்நுட்பங்கள் மூலம் தீர்வு காண்பதை தனது இலட்சியமாக கொண்டு இயங்கிவருகிறது என டாக்டர் பால் தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags : Karunya Trust ,
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்