பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெரம்பலூர், ஏப்.16: பெரம்பலூர் நீதிமன்றத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக நேற்று விசாரணைக்கு கொண்டு வரப்பட்ட வழக்குகள் வாய்தா மூலம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற வளாகத்தில் பரிசோதனை மற்றும் தடுப்பூசிமுகாம் நடந்தது.பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராசு (58). இவர் பெரம்பலூர் மாவட்ட முதன்மைஅமர்வு நீதிமன்றத்தில் இளநிலை அமீனாவாகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த10ம் தேதி துரைராசு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் பெரம்பலூர் மா வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் 93 வயது மூத்த வழக்கறிஞர் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் உள் ளிட்ட 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நீதி மன்றவளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப் பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்கு னர் டாக்டர் கீதாராணி உத்தரவின்பரில், சுகாதாரத் துறை சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 10க்கும் மேற்பட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 61 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறி யும் பரிசோதனை மேற்கொ ள்ளப்பட்டது..கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தைச் சேர்ந்த 16 ஊழியர்க ளுக்கும், நேற்று (15ம் தேதி) 27 நபர்களுக்கும் என மொத்தம் 41 நபர்களுக்கு தடுப்பூ சி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து நீதிமன்றத்தில் சாட்சிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் அதிகம்கூடுவதை தவிர்ப்பதற்காக நேற்று விசாரணைக்குக் கொண்டு வரப்பட்ட வழக்குகள் அனை த்தும் வாய்தா மூலம் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்குகளை காணொளிக்காட்சி மூலம் நடத்த வழக்கறிஞர்களும், பொதுமக்களும் வேண் டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories: