விசாரணைக்கு வந்த வழக்குகள் ஒத்திவைப்பு பெரம்பலூரில் கொட்டி தீர்த்த கோடைமழை

பெரம்பலூர், ஏப்.16: பெரம்பலூரில் நேற்று கொட்டி தீர்த்த கோடை மழையால் சாலையில் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் துர்நாற்றம் வீசியது. பெரம்பலூரில் கடந்த இரண்டு நாட்களாக கோடைமழை பெய்து வருகிறது.கடந்தாண்டு, ஆண்டு சராசரி மழை அளவை விட சற்று அதிகமாக பெய்த மழை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடர்ந் து கனமாக பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினமும், நேற்றும் (14, 15 தேதிகள்) அடுத்தடுத்த தினங்களில் கோடைமழை தொடர்ச்சியாக கொட்டித் தீர்த்து வருகிறது.நேற்று மதியம் 2 மணியளவில் பெய்த கோடைமழை முக்கால் மணி நேரத்திற்கு மேல் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்தது. இதனால் பெரம்பலூர், அரணாரை, செஞ்சேரி, பாளையம், குரும்பலூர், நெடுவாசல், எளம்பலூ ர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் நல்ல மழை பெய்தது. பெரம்பலூர் நகரில் பெய்த மழையால் நகராட்சி அலுவலகம் முன்பு, முறையான வடிகால் அமைக்காததால் மழைநீர் குளம்போல் தேங்கி, கழிவு நீரும் கலந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் அலுவலகத்திற்கு யாரும் நடந்து செல்லமுடியா ததால் 1மணி நேரத்திற்கும் மேலாகத் திண்டாடினர். மேலும் நகராட்சியின் வெங்கடேசபுரத்தில் பாதாள சாக்கடைக் கழிவுநீர் வெளியேறியதால், மழைநீரும் கழிவுநீரும் ஒன்றாகச் சேர்ந்து சாலையோரம் திடீர் ஆறாகஓடியது. இதனால் அப்பகுதியில் தரைக் கடை வியாபாரிகள் சாக்குகளில் விற்பனைக்காக வைத்திருந்த காய்கறிகள் கழிவுநீரில் அடித்துச் செல்லப்பட்டது. நகரெங்கும் கழிவுநீர் மிதந்து சென்றதால் சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தும் விதமாக துர்நாற்றம் வீசியது.

Related Stories: