கொரோனா தடுப்பு விதிகளை மீறிய 1,902 பேரிடம் ரூ.3.93லட்சம் அபராதம் வசூல்

பெரம்பலூர், ஏப்.16:பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற் றாத 1,902 நபர்களிடமிரு ந்து ரூ3,93,600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெர ம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது : கொரோனா வைரஸ் தொற்றுப் பரவால் 2ம் கட்டமாக தமிழகத்தில் அதிவேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மே ற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பொருட்படுத்தாமல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி செயல்படுபவர் களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் கீழ், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணியத் தவறும் பொதுமக்களுக்கு ரூ.200ம், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறும் பொதுமக்களுக்கு ரூ.500ம் அப ராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாகக் கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண் டபங்களுக்கு ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் ஏற்கனவே அறிவிக்கப்ட்டு, தற்போது விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாதரத்துறை, காவல்துறை, வருவாய்துறை மற் றும் நகராட்சியின் மூலம் முகக்கவசம் அணியாத நபர்களிடம் கடந்த மார்ச் 8ம் தேதி முதல் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் மார்ச் மாதத்தில் பெரம்பலூர் தாலுக்காவில் 53 நபர் களிடமிருந்து ரூ10,600ம், வேப்பந்தட்டை தாலுக்காவில் 67 நபர்களிடமிருந்து ரூ.14,000ம், குன்னம் தாலுகாவில் 43 நபர்களிடமிருந்து ரூ10,400ம், ஆலத்தூர் தாலுகாவில் 58 நபர்களிடமிருந்து ரூ11,600ம், சுகாதாரத்துறையின் மூலம் 228 நபர்களிடமிருந்து ரூ45,900ம், பெரம்பலூர் நகராட்சியின் மூலம் 263 நபர்களிடமிரு ந்து ரூ58,900 ம் என மொத்தம் 712 நபர்களிடமிருந்து ரூ.1,51,400 வசூலிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பெரம்பலூர் தாலுக்காவில் 37 நபர்களிடமிருந்து ரூ7,400ம், வேப்பந்தட்டை தாலுக்காவில் 54 நபர்களிடமிருந்து ரூ10,800ம், குன்னம் தாலுக்காவில் 21 நபர்களிடமிருந் து ரூ.4,500ம், ஆலத்தூர் தாலுக்காவில் 39 நபர்களிடமி ருந்து ரூ7,800ம், சுகாதாரத்துறை மூலம் 110 நபர்களிட மிருந்து ரூ.22,900ம், காவல் துறைமூலம் 582 நபர்களிட மிருந்து ரூ.1,19,400ம், பெரம்பலூர் நகராட்சியின் மூலம் 347 நபர்களிடமிருந்து ரூ 69, 400ம் என மொத்தம் 1,190 நப ர்களிடமிருந்து ரூ2,4 2,200 வசூலிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 1,902 நபர்களிடமி ருந்து ரூ.3,93,600 அபராதமா க விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது மாவட்ட நிர்வாகத்தின் முக்கிய நோக்கமல்ல. அனைவரையும் நோய் தொ ற்றிலிருந்து பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகும். எனவே பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்றின் அபாயத்தை உணர்ந்து அத்தியாவசியமின்றி வெளியில் வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: