ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்

பாபநாசம், ஏப்.16: பாபநாசத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு தீத்தொண்டு நாளையொட்டி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தீயணைப்புதுறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ம் தேதி தீத்தொண்டுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதில் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தீத்தொண்டுநாளை முன்னிட்டு பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கலைவாணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பணி்யின்போது இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாபநாசம் கடை வீதி, திருப்பாலைத்துறை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Related Stories:

>