×

காவல்நிலையம், குடியிருப்பு முன் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்துறைப்பூண்டி, ஏப்.16: திருத்துறைப்பூண்டி தாலுகா பகுதியில் கடந்த 4 நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் சாலை உயரமானதால் சில இடங்களில் சாலையோரத்தில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதே போல் காவல்நிலையம், காவலர் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் காவல்நிலையத்திற்கு வருபவர்களும், காவலர் குடியிருப்புகளுக்கு சென்று வருபவர்களும் சிரமப்படுகின்றனர். எனவே காவல் நிலையத்திற்கு செல்லும் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை