வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

மண்ணச்சநல்லூர்,ஏப்.16: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பாலுமகேந்திரன் (36), நம்பர் 1 டோல்கேட் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் ( 48) இருவரும் நேற்று முன்தினம் இரவு நெ.1 டோல்கேட் பழைய கொள்ளிடம் பாலம் அருகே உள்ள பானிபூரி கடையில் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த லால்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (52) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். அதன் பேரில் வழிப்பறியில் ஈடுபட்ட பாலுமகேந்திரன்,.கார்த்திகேயன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலுமகேந்திரன் மீது ரங்கம், கொள்ளிடம், சமயபுரம் ஆகிய பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Related Stories:

>