×

மூட்டை கட்டிய கொரோனா உபகரணங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டு  அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் பணியாற்றும் செவிலியர்கள், மருத்துவர்கள் தங்கள் பாதுக்காப்பிற்கு முக கவச உடைகள், கையுறைகள், முகக்கவசம் அணிவது வழக்கம். பணி முடிந்த பின்னர் அவற்றை கழற்றி சென்று விடுவார்கள். இதனை மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உடனடியாக எரியூட்ட வேண்டுமென அரசு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. ஆனால், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் அந்த முக கவச உடைகள், கையுறை, போன்றவை மூட்டை கட்டி ஓர் இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த உடைகளில் இருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என மருத்துவமனைக்கு வருபவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு