×

மாவட்டத்தில் 721 மி.மீ. மழை பதிவு

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 721.40 மி.மீ மழை பதிவானது. திருப்பூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நள்ளிரவு 12 மணி வரை பல இடங்களில் இடைவிடாது மழை பெய்தது. இந்த திடீர் மழையால் திருப்பூரில் பிச்சம்பாளையம் புதூர், பாண்டியன் நகர், ஊத்துக்குளி ரோடு, புது பஸ்நிலையம், புஷ்பா தியேட்டர், காந்தி நகர், அனுப்பர்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. அதேபோல், காலேஜ் ரோட்டில் உள்ள ராயபுரம் மற்றும் அணைப்பாளையம், பகுதியில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், டி.எம்.எப்.பாலத்தில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டி தீர்த்தது.  மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): திருப்பூர் வடக்கில் 54 மி.மீ., திருப்பூர் தெற்கில் 63, திருப்பூர் கலெக்டர் அலுவலகம் 50, பல்லடம் 34, ஊத்துக்குளி 60, காங்கயம் 107, தாராபுரம், 12, அவிநாசி 78, மூலனூர் 18, குண்டடம் 20, திருமூர்த்தி டேம் 54, உடுமலை 10, மடத்துக்குளம் 48, அமராவதி டேம் 1, வெள்ளகோயில் வருவாய் துறை அலுவலகம் 70, திருமூர்த்தி டேம் (ஐ.பி) 42.40 என மொத்தம் 721.40 மி.மீ. மழை பதிவு ஆகியுள்ளது. சராசரி 45.09 மி.மீ., ஆகும். வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இந்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சிைய ஏற்படுத்தியது.

Tags :
× RELATED தேர்தல் விதிமீறல் அரசியல் கட்சியினர் மீது வழக்கு