கடநாடு ஊராட்சியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது

ஊட்டி,ஏப்.16: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊட்டி அருகேயுள்ள கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலும் தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பாதிப்பு குறைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அனைத்து பகுதிகளிலும் உள்ள ஊராட்சி மற்றும் ேபரூராட்சி நிர்வாகங்கள் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்தல், முககவசம் அணிதல் மற்றும் கிருமி நாசினியை பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஊட்டி அருகேயுள்ள கடநாடு ஊராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் வீதி வீதியாக கொண்டு கிருமிநாசினியை மோட்டார்கள் பயன்படுத்தி தெளித்து வருகின்றனர். ேமலும், தலைவர் சங்கீதா சிவமணி தலைமையில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். முகவசம் அணிதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், அடிக்கடி கை கழுவதல் போன்ற விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஊட்டி, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லேசான அறிகுறிகள் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகளில் சுமார் 80 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் மற்ற நோய்களுக்காகவும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் நகராட்சி மூலம் காலை, மாலை இருவேளைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி டீன் மனோகரி கூறுகையில், ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் மொத்தம் 426 படுக்கைகள் உள்ளன. இதில் 125 கொரோனா படுக்கைகள் உள்ளன. 110 படுக்கைகளில் மையப்படுத்தப்பட்ட ஆக்சிஜன் வசதி உள்ளது. இதுதவிர சிலிண்டர் மூலம் ஆக்ஸிஜன் வசதியும் உள்ளது. இதுதவிர 76 வென்டிலேட்டர்களும் உள்ளன. கொரோனா சிசிக்கை பெற்று வருபவர்களுக்கு நாள்தோறும் கபசுர குடிநீர், மூச்சு பயிற்சி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன, என்றார்

Related Stories: