×

ரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரம்

ஊட்டி,ஏப்.16:ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.ஆண்டு தோறும் கோடை சீசன் போது ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்தது. கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வரவில்லை. இம்முறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை சற்று குறைந்து காணப்படுகிறது.

எனினும், நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ரோஜா கண்காட்சிக்காக  தற்போது ரோஜா பூங்கா தயார் செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில பாத்திகளில் மலர்கள் பூத்துள்ளதால், இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிைலயில், பூங்காவில் உள்ள பெரும்பாலான இடங்களில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. பல்வேறு வடிவங்களில், பல வகையான அலங்கார செடிகளை ஊழியர்கள் நடவு செய்து வருகின்றனர். ரோஜா கண்காட்சியின் போது, இந்த அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்