சாலைகளில் நடந்து சென்று கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாநகராட்சி கமிஷனர்

கோவை, ஏப். 16:  கோவை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று சாலைகளில் நடந்து சென்று முக கவசம் அணியாதவர்களிடம் கொரோனா தடுப்பு வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கோவை அவிநாசி ரோடு, நவ இந்தியா, பீளமேடு, மசக்காளிபாளையம் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்து சென்று கடைகளில் முக கவசம் அணியாத ஊழியர்கள், இருசக்கர வாகனங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்கள் மற்றும் சாலைகளில் முக கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்கள் ஆகியோரை நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தார். பின்னர், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் சென்று அங்கு தடுப்பு பணிகளை பார்வையிட்டார். அப்போது, பேருந்துகளில் ஏறி ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories:

>