அம்பேத்கர் பிறந்த நாள் விழா

பெ.நா.பாளையம், ஏப். 16: துடியலூரில் அம்பேத்கரின் 131 வது பிறந்த நாள் விழா தேசிய தாழ்த்தப்பட்டோர் மக்கள் நல உரிமை இயக்கத்தின் சார்பாக நடைபெற்றது.இதில் அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்த வடக்கு எம்எல்ஏ  அருண்குமார்   பொதுமக்களுக்கு முககவசம் மற்றும் சானிடைசர் வழங்கினார். தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் நில உரிமையை இயக்கத்தின்  நிறுவனத் தலைவர் மருதாச்சலம்,     ஆதி திராவிட நலத்துறை மாநில குழு உறுப்பினர் செல்வகுமார்,   தேசிய தூய்மைப்பணி ஆணையத்தின் துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர்  பேசினார்கள். ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கல்யாணசுந்தரம், அருந்ததியர் விடுதலை முன்னணியின் தலைவர் மாதிகா, பருவாய் சாமிநாதன் மற்றும் திராவிட சிறுத்தைகள் கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>