மாணவிகள் 3 பேர் மாயம்

ஈரோடு, ஏப்.16: ஈரோடு சூரம்பட்டி கிழக்கு அம்பேத்கர் வீதியை சேர்ந்தவர் மணி. இவரது மகள் காயத்திரி (18). இவர், குமலன்குட்டை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். நேற்று வீட்டில் இருந்த காயத்திரி, திடீரென்று மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் காயத்திரி குறித்த எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, தாய் செல்வி அளித்த புகாரின் பேரின் ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதேபோல், பவானி அடுத்துள்ள ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் குணவதி (21). கல்லூரி படிப்பு முடித்து வீட்டில் இருந்து வந்த குணவதி, கடந்த 9ம் தேதி திடீரென மாயமானார். இது குறித்து அவரது தாய் ராதா ஆப்பக்கூடல் போலீசில் புகார் செய்துள்ளார். வெள்ளோடு அடுத்துள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் துர்காதேவி (16). இவர், வெள்ளோடு அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த துர்காதேவி, திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் துர்கா தேவி குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை, தந்தை ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் வெள்ளோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>