பிக்பாக்கெட் வாலிபர் கைது

ஈரோடு, ஏப்.16: ஈரோடு வீரப்பன்சத்திரம் முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (39). இவர், ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து சவிதா சிக்னல் பகுதிக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் டவுன் பஸ்சில் ஏறினார். அந்த பஸ் நாச்சியப்பா வீதியில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது கணேசனின் சட்டைப்பையில் இருந்த ரூ.500ஐ ஒருவர் எடுத்துக்கொண்டு பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். இதைப்பார்த்த சக பயணிகள், அந்த நபரை மடக்கி பிடித்து ஈரோடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் கடலடி பூக்குளம்காலனியை சேர்ந்த வினோத் (29) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>