பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி

ஈரோடு, ஏப்.16: கனரா வங்கியின் கிராமப்புற சுயவேலை வாய்ப்பு திட்ட அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  பெண்களுக்கான இலவச தையற் கலை பயிற்சி வரும் 21ம் தேதி முதல் மே மாதம் 27ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.  ஈரோடு மாவட்டத்திலுள்ள கிராம பஞ்சாயத்துக்களை சேர்ந்த 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள், அல்லது 100 நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும்  இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவர்கள் கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு என்ற முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>