கடலூர் மாவட்டத்தில் புதிதாக 179 பேருக்கு கொரோனா மேலும் 2 பேர் பலி

கடலூர், ஏப். 16:  கடலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 179 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 27,157 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் இறந்த நிலையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.     நேற்று சிகிச்சை முடிந்து 115 பேர் வீடு திரும்பிய நிலையில், இதுவரை 25 ஆயிரத்து 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 715 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 6 லட்சத்து 88 ஆயிரத்து 744 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18 இடங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், கடலூர் அரசு மருத்துவமனையில் கடலூரை சேர்ந்த 38 வயது ஆண் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் குமராட்சியைச் சேர்ந்த 70 வயது ஆண் இறந்த நிலையில், மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்றுக்கு இறந்தவர்கள்் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது.15 நாட்களில் 1,411 பேர் பாதிப்பு: கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 6 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதுவரை 7 பேர் இறந்துள்ளனர். 15 நாளில் புதிதாக 1,411 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

Related Stories:

>