×

மீஞ்சூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: வட்டார தலைமை மருத்துவர் வேண்டுகோள்

பொன்னேரி, ஏப்.16: மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 7,000 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என, வட்டார தலைமை மருத்துவர் ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரி, பழவேற்காடு அரசு பொதுமருத்துவமனைகள் மற்றும் மீஞ்சூர், காட்டூர், தேவம்பட்டு, அத்திப்பட்டு உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமாக அந்தந்த மருத்துவமனைகளுக்கு சென்று தடுப்பூசியினை போட்டுக் கொள்கின்றனர்.

இதுகுறித்து மீஞ்சூர் வட்டார தலைமை மருத்துவ அலுவலர் ராஜேஷ் கூறுகையில், ‘‘கண்ணுக்கு தென்படாத காற்றில் பரவும் கொரொனா நோய்த்தொற்றைத் தடுக்க மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பொன்னேரி மற்றும் பழவேற்காடு அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதுவரை 7,000 பேருக்கு கொரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் முகக்கவசம் அணிதல், கிருமி நாசினியை பயன்படுத்துதல், தனிமனித இடைவெளியை உள்ளிட்ட விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.’’ என்றார்.

Tags : Minsur Union ,Regional ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்