×

2 கோயில்களில் கொள்ளை

தாம்பரம், ஏப்.16: சேலையூர் பகுதியில் உள்ள பிடாரி பொன்னியம்மன் மற்றும் வீரபத்திரர் கோயில்களை திறக்க நேற்று காலை நிர்வாகிகள் வந்தபோது, கோயில்களின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் மற்றும் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோயில் வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கடந்த மாதத்தில் சேலையூர் சுற்றுவட்டார பகுதிகளில் 5 கோயில்களில் இதுபோன்ற கொள்ளை  சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED 2 கோயில்களில் நகை திருட்டு