முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட தொகை கோடிக்கணக்கில் மோசடி

சென்னை: தமிழக முதல்வர் காப்பீடு திட்ட நடவடிக்கையின் கீழ், பயனாளர்களான அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய காப்பீடு தொகைகள் தனது பெயரிலான தனிப்பட்ட வங்கி கணக்கு மற்றும் முதல்வர் காப்பீடு திட்ட வங்கி கணக்கு என போலியான வங்கி கணக்குகள் மூலம் ரூ.1.70 கோடி கையாடல் நடந்துள்ளதாக மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனமான மெடி அஸ்ஸி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் சார்பில் அஜித்குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தனிப்படை போலீசார் விசாரணையில், புகார்தாரரின் நிறுவனத்தில் பணிபுரிந்த குணசேகரன மற்றும் சரவணகுமார் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்கின் தனது நண்பர் கமல்ஹாசன் என்பவரால் முதல்வர் மருத்துவ காப்பீடு என்ற பெயரில் திருவள்ளூரில் துவக்கப்பட்ட வங்கி கணக்கு மூலமாக ரூ.1.70 கோடி அளவிற்கு முறைகேடு நடந்தது தெரியவந்தது. இதையடுத்து  குணசேகரன், சரவணக்குமார் மற்றும் கமல்ஹாசன் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்டன. அவர்களிடமிருந்து ரூ.8 லட்சம் ரொக்கப்பணம், ரூ.3 லட்சம் மதிப்பிலான 13 சவரன் தங்க மாலை மற்றும் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: