வேகம் எடுக்கும் கொரோனா பயணிகள் குறைவு 36 விமானங்கள் ரத்து

சென்னை: கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து புறப்படும் 18 விமானங்களும், சென்னைக்கு வரும் 18 உள்நாட்டு விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டன. கொரோனா வைரஸ் அலை மிக பெரிய அளவில் தமிழகத்தில் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாமல் நேற்று முன்தினம் 18 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இது, நேற்று இரு மடங்காக அதிகரித்துள்ளது. சென்னை உள்நாட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்படும் பெங்களூரு விமானங்கள் 4, டெல்லி விமானங்கள் 3, மும்பை விமானங்கள் 3, இந்தூர் விமானங்கள் 2, ஐதராபாத் 1, நாக்பூர் 1, புனே 1, சூரத் 1, மங்களூரு 1, அந்தமான் 1 என 18 விமானங்களும், அதேபோல அந்தந்த இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரும் 18 விமானங்களும் என மொத்தம் 36 விமானங்கள் நேற்று ஒரே நாளில் ரத்தாகி உள்ளது. இவைகள் தவிர நேற்று சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வருகை விமானங்கள் 112, புறப்பாடு விமானங்கள் 109 இயக்கப்படுகின்றன. அவைகளிலும் மிகவும் குறைந்த அளவு பயணிகளே பயணித்தனர்.

Related Stories: