மகன் கண்டித்ததால் தாய் திடீர் மாயம்

சேலம், ஏப். 16: சேலத்தில் எல்லா  கட்சிக்கும் ஓட்டு கேட்க சென்றதை மகன் கண்டித்ததால் மனதேனை அடைந்த தாய் திடீரென மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் சின்னபுதூரை சேர்ந்தவர் பத்மநாபன் (46). இவரது மனைவி சாந்தி(41). கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்ததில், எல்லா அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டம் மற்றும் தேர்தலின் போது ஓட்டு கேட்பதற்கு சாந்தி சென்று வந்துள்ளார். அங்கு கொடுக்கப்படும் சாப்பாடு, பணத்தை வாங்கிக்கொண்டு வருவது வழக்கம். இதேபோல் தேர்தலையொட்டி  15நாட்களாக சாந்தி ஓட்டு கேட்பதற்காக சென்றுவிட்டு வீடு திரும்பினார். இதனை சாந்தியின் மகன் கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த சாந்தி வீட்டை விட்டு வெளியேறி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர் எங்கே சென்றார்?, என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தையுடன் பெண் மாயம்: சேலம் சூரமங்கலம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் அருளரசு. இவருடைய மனைவி ஸ்டெல்லா(21). இவர்களுக்கு யாழினி(3) என்ற மகள் உள்ளார். ஸ்டெல்லா புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள மொபைல் கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை வீட்டில் இருந்த ஸ்டெல்லா திடீரென குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி மாயம்: சேலம் கன்னங்குறிச்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் ஹாசினி என்ற நந்தினி(18), அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். வீட்டில் இருந்த நந்தினி நேற்றுமுன்தினம்  திடீரென மாயமானார். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>