மாணவியை கடத்தி பலாத்காரம்

காடையாம்பட்டி, ஏப். 16:  காடையாம்பட்டி அருகே பிளஸ்2 மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அடுத்த டேனிஸ்பேட்டையை சேர்ந்த 16 வயது மாணவி, பெரியவடகம்பட்டி அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, பெரியவடகம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆதிபராசக்தி கோயிலுக்கு தனி பஸ் ஏற்பாடு செய்து சென்றுள்ளனர். அவர்களுடன் மாணவி, தனது குடும்பத்துடன் சென்றுள்ளார். அதே பஸ்சில் டேனிஸ்பேட்டை அடுத்த வாழையாந்தோப்பு பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகனான கட்டிட தொழிலாளி லோகநாதன்(23) வந்துள்ளார். அப்போது மாணவிக்கும், லோகநாதனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி மாணவிக்கு திருமண ஆசைவார்த்தை கூறி அழைத்துச்சென்ற லோகநாதன், பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த லோகநாதனை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர், போக்சோ சட்டத்தில் அவரை கைது செய்த போலீசார், சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>