7.17 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

சேலம், ஏப்.16: சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிப்பு அதிகரிப்பால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தினமும் 2 ஆயிரம் முதல் 2,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் இதுவரை 7,17,210 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த 34,941 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 33,352 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பலனின்றி 473 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,116 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 11 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 284 வீடுகளில் 1,629 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Related Stories: