மேட்டூர் நீர்மட்டம் 97.91 அடியாக சரிவு

மேட்டூர், ஏப்.16: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வெகுவாக சரிந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 300 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்றும் அதே நிலையில் நீடித்தது. இதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த 2 நாட்களாக விநாடிக்கு 80 கனஅடியாக இருந்த நிலையில், நேற்று காலை 92 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தை காட்டிலும் திறப்பு அதிகமாக உள்ளதால், நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 98.01 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 97.91 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 62.16 டிஎம்சியாக உள்ளது.

Related Stories:

>