மாவட்டத்தில் 174 மி.மீ., மழை பதிவு

நாமக்கல், ஏப்.16: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. மேலும், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த சீதோஷண நிலை நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: குமாரபாளையம் 72, மங்களபுரம் 3, மோகனூர் 7, நாமக்கல் 7, பரமத்திவேலூர் 6, புதுச்சத்திரம் 5,  ராசிபுரம் 4, சேந்தமங்கலம் 16, திருச்செங்கோடு 33, கலெக்டர் அலுவலகம் 8, கொல்லிமலை 13 என மொத்தம் 174 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Related Stories:

>