வேட்பாளர்களின் முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்

திருச்செங்கோடு, ஏப்.16: வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மெகராஜ், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முகவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தங்கலம்(தனி), குமாரபாளையம், திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூர் ஆகிய தொகுதிகளில் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோட்டில் உளள விவேகானந்தா மகளிர் தொழில்நுட்ப கல்லூரியில் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஆயுதம் ஏந்திய இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள்102 பேர்,  சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை சுற்றிலும்  61 தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரா்கள், 30 ஆயுதப்படை வீரா்கள் என சுழற்சி முறையில் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஸ்டிராங் ரூமுக்கு எதிரே வீடியோ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அனைத்து நிகழ்வுகளும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு அகன்ற திரை கொண்ட டிவிக்கள் மூலமாக கண்காணிக்கப்படுவதுடன், அனைத்து நிகழ்வுகளும் 24 மணி நேரமும் பதிவு செய்யப்படுகிறது. கண்காணிப்பு அறையில் உள்ள டிவிக்கள் மூலமாக, வேட்பாளா–்கள் மற்றும் வேட்பாளா–்களின் முகவா–்கள் பார்வையிடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதுகாப்பு பணிகளை தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்ட அவர், அங்கிருந்த குறிப்பேட்டில் தனது வருகையை பதிவிட்டார். மேலும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேட்பாளா–்களின் முகவா–்களிடம் சென்று, கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க கட்டாயம் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Related Stories: