மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை

கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரியில் விடிய, விடிய கன மழை பெய்தது. இதில் மாவட்டம் முழுவதும் 252.1 மிமீ மழை பதிவானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்தது. நள்ளிரவிற்கு பின் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இடியுடன் விடிய, விடிய பெய்த மழையால் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பூமி குளிர்ச்சியடைந்ததால் குளிர்காற்று வீசியது. இந்த மழையால் பயிர்கள் உயிர் பெற்ற துடன், விவசாய பயிர்கள் செழிப்புடன் வளர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி, சூளகிரி மற்றும் சில பகுதிகளில் நேற்று காலையும் மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. நே்றறு காலை 8 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல் கிராமத்தில் 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், போச்சம்பள்ளி  41.6, பாரூர் 41, சூளகிரி  29, கிருஷ்ணகிரி  23.2, தேன்கனிக்கோட்டை  20, பெனுகொண்டாபுரம்  10.2, ஊத்தங்கரை 7.2, தளி  5, ராயக்கோட்டை  3.5, ஓசூர் 1 மி.மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 252.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மின்தடையால் மக்கள் அவதி

போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று அதிகாலை 5 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. ஆனால் நள்ளிரவு 12 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக இந்த மின் தடை நீடித்ததால் இரவு நேரங்களில் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போச்சம்பள்ளில் நேற்று அதிகாலை 5 மணியளவில் தான் மழை பெய்ய ஆரம்பித்தது. ஆனால் இரவு 12 மணிக்கே மின் தடை ஏற்பட்டதால் தூங்க முடியவில்லை. மேலும் பகல் நேரங்களில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் எங்களது அன்றாட வேலை பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து மின்வாரியத்துறையினர் முன்அறிவிப்பு தெரிவிக்க வேண்டும் என்றனர்.

Related Stories: