கனமழையால் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் புகுந்தது

காவேரிப்பட்டிணம், ஏப்.16:  காவேரிப்பட்டணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பண்ணந்தூர் தருமதோப்பு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், காவேரிப்பட்டணம் பகுதியில் நேற்று அதிகாலை கனமழை பெய்தது. . இதனால் குடிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. முறையான சாக்கடை வசதி இல்லாததால், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் வீட்டில் இருந்த குழந்தைகளுடன் தூங்க முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘சின்ன ஏரி என்கிற புதுக்கோட்டை ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாய் முழுவதும், சிலர் ஆக்கிரமித்து உள்ளதால் ஏரியில் தண்ணீர் நிற்க இடமில்லாததால், மழை நீருடன் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சில நேரங்களில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வருவது வாடிக்கையாக உள்ளது. இதனால் குழந்தைகளுடன் தூங்க முடியாமல் மழை காலம் வந்தாலே நிம்மதியின்றி பீதியடைந்து வருகிறோம். எனவே ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பழைய கால்வாய்களை தூர்வாரி, கால்வாய் அமைக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: