ரூ.90 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

வெள்ளக்கோவில், ஏப். 15: வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு  தாராபுரம், காங்கயம், வாணியம்பாடி, விலாத்திக்குளம், பழனி பகுதி விவசாயிகள் 205 பேர், 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1582 தேங்காய் பருப்பு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளக்கோவில், காங்கயம், மூலனூர் பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 12 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் முதல் தர பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.123.90க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ ரூ.84க்கும் ஏலம் நடந்தது. மொத்தம் 90 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>