கிராமப்புற விவசாயிகளுக்கு மண் பரிசோதனை விழிப்புணர்வு

காங்கயம், ஏப். 15: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் வேளாண் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கடந்த சில நாட்களாக காங்கயம் சுற்றுவட்டார கிராமங்களில் பயிற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கயம் அருகே பரஞ்சேர்வழி  கிராமத்தில் விவசாயிகளுக்கு மண் பரிசோதனைக்கு மண்மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 வரையிலான இடங்களில் மண் மாதிரி சேகரித்து, அதனை கால் குறைப்பு முறையில் ஒரு கிலோ அளவிற்கு பாலித்தீன் பையில் சேகரித்து மண்பரிசோதனை செய்வதன் மூலம் மண்ணில் உள்ள சத்துக்களை கண்டறிந்து அதற்கேற்ப பயிர்களை பயிரிடுவது குறித்து விளக்கமளித்தனர்.

Related Stories: