ஊட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஊட்டி, ஏப்.15: தீ தொண்டு நாள் வார விழாவினை முன்னிட்டு தீயணைப்புத்துறை சாா்பில் ஊட்டியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறையில் பணிபுரியும் தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து மற்றும் புயல், நிலநடுக்கம், சுனாமி, மண்சரிவு, தொழிற்சாலை விபத்து மற்றும் பேரிடர்களில் மீட்பு பணிகளில் ஈடுபடும் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாக அவர்களின் வீரத்தை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14ம் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

உயிர்நீத்த வீரர்களின் நினைவை போற்றிடும் வகையில் நாடு முழுவதும் தீ தொண்டு நாள் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் தொடர்–்ச்சியாக, ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் வீர வணக்க நாள் அஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆர்ணிஷா பிரியதர்ஷினி தலைமை வகித்து, உயிரிழந்தோர் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ெதாடர்ந்து, ஊட்டி ஏடிசி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் தீ தடுப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோக்கப்பட்டன. இதில், ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், மார்க்கெட், பஸ் நிலையம், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

குன்னூர்: குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு தீ தொண்டு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழகத்தில் தீயணைப்பு துறை நூறு ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல் ஒரு வாரம் தீ தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் மீட்பு உபகரணங்களை வைத்து பணியின்போது உயிர் நீத்த வீரர்களுக்கு நினைவஞ்சலி வைக்கப்பட்டது.

அதன்படி குன்னூர் தீயணைப்பு துறையினர் சார்பில் நிலைய அலுவலர் மோகன் தலைமையில் அனைத்து தீயணைப்பு பணியாளர்கள் முன்னிலையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்கள் மத்தியில் தீ விபத்துக்கள் ஏற்பட்டால் எவ்வாறு செயல்படுவதுபோன்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Related Stories: