பெருந்துறை பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம் மீட்பு

ஈரோடு, ஏப்.15:பெருந்துறை பஸ் ஸ்டாண்டு வளாகத்தில் உள்ள கடை முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துகிடப்பதாக பெருந்துறை கிராம நிர்வாக அலுவலர் மாதுசேதுங் நேற்று முன்தினம் பெருந்துறை போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இறந்து கிடந்த நபருக்கு அருகில் ஒரு கருப்பு நிற பேக்கில் துணி மற்றும் விஷ பாட்டில் இருந்தது. இதையடுத்து, விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>