தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஈரோடு, ஏப்.15: தமிழ் புத்தாண்டையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் நேற்று சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றது. தமிழ் ஆண்டுகளில் சர்வாரி ஆண்டு முடிந்து சித்திரை 1ம் தேதியான நேற்று பிலவ ஆண்டு பிறந்தது. இதையொட்டி, கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. முன்னதாக, பொதுமக்கள் தங்களது வீடுகளில் கனிகள், நகைகள், பணம் ஆகியவற்றை பூஜை அறைகளில் வைத்து வழிபாடு நடத்தினர். பின்னர், அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஈரோடு கோட்டை கபாலீஸ்வரர் கோயில், ரங்கநாதர் கோயில், மகிமாலீஸ்வரர், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், நடுமாரியம்மன், கொங்காலம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. ஈரோடு அடுத்துள்ள திண்டல் முருகன் கோயிலில் சுவாமிக்கு அதிகாலையில் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.  இதேபோல், பவானி சங்கமேஸ்வரர், கோபி பச்சமலை முருகன், பண்ணாரியம்மன், கொடுமுடி நட்டாற்றீஸ்வரர், ஈரோடு பார்க் ஆஞ்சநேயர் கோயில், ரயில்வே காலனி சாய்பாபா கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. கொரோனா பரவலையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories: