பாமக நிர்வாகி மீது விசிகவினர் புகார் திருமாவளவனை அவதூறாக பேசியதாக

குடியாத்தம், ஏப்.15: குடியாத்தத்தை சேர்ந்த குமரன் என்பவர் இணையதளத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியும், புரட்சி பாரதம் கட்சி மாநில தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி குறித்தும் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புரட்சி பாரதம் கட்சி வேலூர் மாவட்ட செயலாளர் மேகநாதன் தலைமையில் குமரன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குடியாத்தம் டவுன் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர். இதையறிந்த பாமகவை சேர்ந்த இளைஞரணி நிர்வாகி குமார், குமரனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியை எப்படி விமர்சிக்கலாம் என கண்டித்ததாக கூறப்படுகிறது.

அப்போது, விசிக தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசியதாக சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த விசிக நகர செயலாளர் குமரேசன், பாமக இளைஞர் அணி நிர்வாகி குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி நேற்று முன்தினம் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன், தனிப்பிரிவு தலைமை காவலர் ஹரி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>