தீத்தொண்டு நாளை முன்னிட்டு பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு மரியாதை

வேலூர், ஏப்.15: பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு தீத்தொண்டு நாளை முன்னிட்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. தீயணைப்பு துறையில் மீட்புபணியின் போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி தீத்தொண்டு நாள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான தீத்தொண்டு நாள் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி வேலூர் தீயணைப்பு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அப்துல்பாரி ஆகியோர் மாவட்ட தீயணைப்பு நிலையத்தில் நேற்று காலை 8 மணிக்கு பணியின்போது உயிர்நீத்த வீரர்களை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நிலைய தீயணைப்பு அலுவலர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் தீத்தொண்டு நாள் தினம் அனுசரிக்கப்பட்டது.

Related Stories:

>