வனவரை பைக்கில் மோதி தள்ளிவிட்டு சாராயத்துடன் தப்பிய கடத்தல் கும்பல்

பேரணாம்பட்டு, ஏப்.15: பேரணாம்பட்டு வனப்பகுதிக்கு உட்பட்ட குண்டலப்பள்ளியில் வனவர் சந்திரசேகர் மற்றும் வன ஊழியர்கள் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் இருந்து பைக் ஒன்று வந்தது. அந்த பைக்கில் வந்த மர்ம நபர்கள் கள்ளச்சாராயத்தை லாரி டியூப்களில் எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து, அந்த மர்ம நபர்களை வனவர்கள் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது பைக்கில் வந்த நபர்கள், தடுத்து நிறுத்த முயன்ற வனவரை பைக்கில் மோதி கீழே தள்ளிவிட்டு சாராயத்துடன் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில், வனவர் படுகாயங்களுடன் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பேரணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories:

>