ராம்ஜிநகர் அருகே விபத்து லாரி -கார் மோதல் வாலிபர் பலி, 3 பேர் காயம்

திருச்சி, ஏப்.15: திருச்சி ராம்ஜி நகர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். 3 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூரை சேர்ந்தவர் விஜயராம்(22). இவர் கார் சென்டர் நடத்தி வருகிறார். இவரது நண்பர்கள் சதீஸ்(30), ஜனார்த்தனன்(26), பாரதி(30) ஆகிய 4 பேரும் ஒரு சொகுசு காரில் கடந்த11ம் தேதி கொடைக்கானலுக்கு சுற்றுலாவாக சென்றனர். நேற்று அங்கிருந்து திரும்பினர். திருச்சி- திண்டுக்கல் சாலை நவலூர் குட்டபட்டு தனியார் கல்லூரி பிரிவு ரோட்டில் வந்த போது முன்னதாக பிஸ்கெட் லோடு ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. லாரி சிக்னல் போடாமல் திரும்பியதால் பின்னால் சென்ற கார் அதன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவர் குழந்தைசாமி(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>