படுக்கைகள் அதிகரிக்க திட்டம் முசிறி அருகே சொரியம்பட்டியில் சுகாதாரத் துறை அலுவலர்களை கண்டித்து மக்கள் மறியல் முயற்சி

முசிறி, ஏப்.15: முசிறி அருகே சொரியம்பட்டி கிராமத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறி அவர்களை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.இந்நிலையில் நேற்று சொரியம்பட்டியை சேர்ந்த மற்றொரு பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக கூறி அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என சுகாதார துறை அலுவலர்கள் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிப்பு உள்ளதாக கூறப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனராம். ஆனால் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனை முடிவில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்த சொரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தவறாக கூறி எங்களை மன உளைச்சலுக்கு உட்படுத்தும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி முசிறி - துறையூர் ரோட்டில் சாலை மறியல் செய்வதற்காக சொரியம்பட்டி மேடு என்ற இடத்தில் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த முசிறி போலீசார் மற்றும் தாசில்தார் சந்திர தேவநாதன் மற்றும் மருத்துவ அலுவலர் குமரேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

நடைபெற்ற குழப்பத்திற்கு உரிய விசாரணை நடத்தப்படும் .தவறு இருப்பின் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>