இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவங்கியது

பெரம்பலூர் ஏப் 15: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் மாதத்தில் நோன்பு நேற்று முதல் துவங்கியது. இஸ்லாமியர்கள் முக்கியப் பண்டிகையாக ரம்ஜான் கொண்டாடி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கு முன்னர் ரம்ஜான் மாதம் தொடங்கிய உடன் முதல் தேதியிலிருந்து 30 நாட்கள் நாள்தோறும் நோன்பு இருந்து தொழுகை நடத்துவார்கள். மாதம் முழுவதும் நோன்பு கடைபிடிக்கப்படும். 30 நாள்கள் நோன்பு முடிந்த உடன் ரம்ஜான் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். ரம்ஜான் மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வரும் அமாவாசை பிறை தெரிந்த மறுநாள் நோன்பு தொடங்குவதை வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

அதேபோல் அமாவாசை முடிந்து நேற்றுமுன்தினம் பிறை தெரிந்தது.அதனையடுத்து நேற்று முதல் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பை தொடங்கினார். கொரோனாவையொட்டி பள்ளிவாசலில் குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டதால் குறைவான அளவிலேயே பொதுமக்கள் வந்தனர். இதேபோல் லப்பைகுடிகாடு, வி.களத்தூர், வாலிகண்டபுரம், கைகளத்தூர், செட்டிகுளம், பாடாலூர், பூலாம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு தொழுகையை தொடங்கினர்.

Related Stories: