செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் படி பூஜை

பாடாலூர், ஏப். 15: ஆலத்தூர் தாலுகா செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு படி பூஜை நடைபெறுவது வழக்கம். தமிழ் புத்தாண்டு தினமான நேற்று படிபூஜை விழா நடைபெற்றது.இதையொட்டி  மலையின் அடிவாரத்தில் உள்ள படிக்கட்டில் கணபதி பூஜை, கோ பூஜை நடைபெற்றது. ஆண்டு தோறும் படி பூஜை விழாவில் செட்டிகுளம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், சிறுவயலூர், குரூர், மாவலிங்கை, பெரகம்பி, நாட்டார்மங்கலம், கூத்தனூர், பொம்மனப்பாடி, சத்திரமனை, வேலூர், ரெங்கநாதபுரம், தம்பிரான்பட்டி, கீழக்கணவாய், செஞ்சேரி, குரும்பலூர், அம்மாபாளையம், சீதேவிமங்கலம், பாடாலூர், திருவிளக்குறிச்சி, இரூர், ஆலத்தூர்கேட், நாரணமங்கலம், காரை, தெரணி, ஈச்சங்காடு, மருதடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பெண்கள் கலந்துக் கொண்டு படியில் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபாடு நடத்துவார்கள்.

ஆனால் நடப்பாண்டு கொரோனா காரணமாக படிபூஜை விழாவில் பெண்கள் கலந்துக் கொள்ளவில்லை. படிகளுக்கு மட்டும் மலர்தூவி அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தண்டாயுதபாணிக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. அதில் செட்டிகுளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: