ராயனூர் பாசன வாய்க்காலை தூர்வார கோரிக்கை

கரூர், ஏப். 15: கரூர் ராயனூர் வழியாக செல்லும் பாசன வாய்க்காலை சுத்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் ராயனூர் வழியாக செல்லாண்டிபாளையம் பகுதியில் இருந்து மில்கேட் வரை பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் பலவேறு கழிவுகளும், பிளாஸ்டிக் பொருட்களும் அதிகளவு கொட்டப்படுவதால் வாய்க்கால் அசுத்தமடைந்துள்ளது. எனவே, இதனை சுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாசன வாய்க்காலை சுத்தம் செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>