தமிழ் புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருவள்ளூர் ஏப்.15: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு அபிஷேகம் ஆராதனை நேற்று நடந்தது. பக்தர்கள் இதையொட்டி, நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, திருவள்ளூரர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றியும்  தரிசனம் செய்தனர். கோயிலுக்கு சென்ற பக்தர்கள் அனைவருக்கும் சனிடைசர் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்திலுள்ள உள்ள அனைத்து கோவில்களிலும் மக்கள் முக கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>