அம்பேத்கர் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் மரியாதை

திருவள்ளூர், ஏப் 15: அம்பேத்கரின் 130 வது பிறந்தநாள் விழா நேற்று திருவள்ளூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு திமுக மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதிமுக முன்னாள் நகர செயலாளர் இரா.மணியரசு, தொமுச ஓட்டுனர் சங்க செயலாளர் எம்.விஜயகுமார், நடத்துநர் சங்க செயலாளர் என்.பழனி ஆகியோரும் தமிழர் பேரரசு கட்சி தலைவர் வழக்கறிஞர் கெ.கணேசன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் ஜெயதென்னரசு ஆகியோரும் மாலை அணிவித்தனர். அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.மாரிமுத்து, நிர்வாகிகள் வி.தேவதாஸ், பி.தணிகாசலம், க.ராமமூர்த்தி, ஏ.ஏழுமலை ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் சி.மாலன், மணியரசு, ஏகலைவன், நாகராஜ், சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் ஆயில் மில் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு காங்கிரஸ் மாவட்ட எஸ்சி, எஸ்டி பிரிவு தலைவர் வழக்கறிஞர் இ.கே.ரமேஷ் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் மாலை அணிவித்தார். இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகர் வேட்பாளர் டி.மைக்கேல் தாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் ஜெய்பீம் செல்வம், வீரா விஜி, டி.கே.குமார், சேலை எஸ்.சுரேஷ், டில்லி, ராஜேஷ், ராக்கெட் ராஜேஷ், பிரபாகரன், வெற்றிவேந்தன், லோகேஷ், மதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சி மாநில இளைஞரணி தலைவர் மணவூர் ஜி.மகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் ஒன்றிய தலைவர் கே.கமல், மாவட்ட துணை செயலாளர் பி.சதா, பி.சிவா, கோபி, குரு, வில்சன், மோகன்தாஸ், பழனி, குமார், பாரதி, ஜெய் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். திருவள்ளூர் நகரம், புங்கத்தூர் பகுதியில் அம்பேத்கரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மார்பளவு சிலை திறப்பு விழா நேற்று நடந்தது. புரட்சி பாரதம் கட்சி நகர தலைவர் தே.தேவா தலைமை தாங்கினார். ஜாக்டோ ஜியோ மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ், நகர இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு புதிதாக நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Related Stories: