வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப்பதிவு டாஸ்மாக்

சென்னை: வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப் பதிவு நடப்பதையொட்டி இன்று காலை 10 மணி முதல் மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடைபெற இருக்கும் 2021ம் ஆண்டு சட்ட மன்ற பொதுத் தேர்தலின் தொடர்ச்சியாக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு மைய எண் 92ல் மறுவாக்குப் பதிவு நடைபெறுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் (சில்லறை விற்பனை) விதிகள் 1989, விதி 23 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 2(ஏ) ஆகியவைகளின் கீழ் எண்.26, வேளச்சேரி சட்ட மன்ற தொகுதியின் வாக்குப் பதிவு மைய எண் 92ன் எல்லையில் உள்ள அனைத்து (எப்எல்.1) மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், எப்எல்.2 உரிமம் முதல் எப்எல்11 வரை (எப்எல் 6 நீங்கலாக) உள்ள உரிமங்கள் கொண்ட பார்கள் அனைத்தும் வருகிற 15.4.2021 (இன்று) காலை 10.00 மணி முதல் 17.04.2021 (வாக்குப் பதிவு நாள்) அன்று நள்ளிரவு 12.00 மணி வரை கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் எனவும், அன்றைய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது எனவும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: