அரசு நிலத்தில் போர்வெல் அமைத்த 4 பேர் சிக்கினர்

தண்டையார்பேட்டை: திருவொற்றியூர் எல்லைம்மன் கோயில் தெரு ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் சிலர் போர்வெல் அமைத்து கொண்டிருந்தனர். தகவலறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது, போர்வெல் அமைத்து கொண்டிருந்தவர்களிடம் விசாரணை செய்ததில் தங்களுக்கு சொந்தம் என கூறி தகராறு செய்தனர். மேலும், வாக்குவாதம் முற்றி, அதிகாரிகளை தாக்க முற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி சேஷாத்ரி அளித்த புகாரின் அடிப்படையில், திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவத்தில் தொடர்புடைய நால்வரை, நேற்று காலை கைது செய்தனர். பின்னர் கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவொற்றியூர் தாங்கலை சேர்ந்த நவுசத்கான்(30), பாபு(38), முகமது சபியுல்லா(41), முகமது அலி(40) என தெரியவந்தது. இவர்கள் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடியது தெரியவந்தது. தொடர்ந்து நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: