×

ரமலான் நோன்பு துவக்கம்

ராமநாதபுரம், ஏப்.15: முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பு ஏப்.14ல் துவங்கும் என சென்னை தலைமை காஜி இரண்டு நாட்களுக்கு முன் அறிவித்து இருந்தார். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து நோன்பு தொடங்கலாம் என பள்ளிவாசல்களில் நேற்று முன்தினம் இரவு அறிவிக்கப்பட்டது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையா க வாழும் கீழக்கரை, ஏர்வா டி, ஒப்பிலான், பெருங்குளம், பனைக்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டினம், தொண்டி, இருமேனி உள்பட பல்வேறு பகுதிகளில் நோன்பிற்கான தராவிஹ் தொழுகை நடத்தினர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு தொழுகை நடந்தது. கொரோனா பரவல் காரணமாக ரமலான் தொழுகை கடந்தாண்டு நடைபெறவில்லை. முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகைக்கு வர வேண்டும் என மசூதிகளில் அறிவிக்கப்பட்டது. இக்கட்டுப்பாட்டுகளை பின்பற்றி நேற்று இரவு தராவீஹ் தொழுகை நடந்தது. 30 நாள் நோன்பு நிறைவுக்கு பின் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Tags :
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ